மதுரை மாவட்டம் கச்சிராயன்பட்டி நான்கு வழிச்சாலையில் அமமுக நிர்வாகி எஸ். பாண்டியன் தனது மகன் திவாகர் உடன் காரில் சென்றார். அப்போது காரின் டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
கார் டயர் வெடித்து விபத்து: அமமுக நிர்வாகி உயிரிழப்பு - madurai district news
மதுரை: கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அமமுக நிர்வாகி உயிரிழப்பு
இந்த விபத்தில் அமமுக நிர்வாகி எஸ்.பாண்டியன், அவரது மகன் திவாகர் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் மின்கம்பியை மிதித்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு!