மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நேற்று நள்ளிரவு அதிவேகமாக வந்த கார் ஒன்று அப்பகுதியில் சாலையோரம் உள்ள கடை வீடுகளில் மோதியது. இதில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த ரங்கசாமி என்ற முதியவர் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரதான சாலையில் தறிகெட்டு ஓடிய கார்; 4 இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
மதுரை: சாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில், முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பாக நான்கு இளைஞர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
முதியவர் காயம்
மேலும், இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், மெர்சி என்பவரின் பெயரில் விபத்தை ஏற்படுத்திய கார் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், இச்சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய நான்கு இளைஞர்களைத் தேடி வருகிறார்கள்.