மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கிரைம் பிராஞ்ச் பகுதியில், சென்னை பதிவு எண் கொண்ட கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து, ஓட்டுநர் காரில் இருந்து கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மதுரையில் சாலையின் நடுவே தீ பற்றி எரிந்த கார் - car fire
மதுரை: பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலையின் நடுவே நேற்றிரவு திடீரென கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
fire
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் காரின் கேஸ் இணைப்பில் ஏற்பட்ட கசிவின் காரணமாகவே இந்த தீ விபத்து நடந்துள்ளதாக தெரியவந்தது.
Last Updated : Aug 8, 2019, 1:18 PM IST