திருச்செந்தூரில் இருந்து பெங்களூருக்குச் சென்ற தனியார் பேருந்தில், கஞ்சா மூலப்பொருட்களால் உருவாக்கப்பட ஹாஸஸ் எண்ணெய் கடத்தி வரப்படுவதாக மத்திய போதை தடுப்பு பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மதுரை மாவட்ட சமயநல்லூர் அருகே சென்ற அலுவலர்கள், தனியார் பேருந்து ஒன்றை சோதனையிட்டனர்.
அரிய வகை போதைப் பொருள் கடத்திய இளைஞர் கைது..! - cannabis oil
மதுரை: தமிழ்நாட்டிலிருந்து, பெங்களூருக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா எண்ணெய்யை கடத்திய இளைஞரை, மத்திய போதை தடுப்பு பிரிவு அலுவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![அரிய வகை போதைப் பொருள் கடத்திய இளைஞர் கைது..!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3890917-thumbnail-3x2-narcotics.jpg)
அப்போது பெங்களூரைச் சேர்ந்த அப்துல்கரீம் என்ற இளைஞரிடம் ரூ.20 லட்சம் மதிப்பில் கஞ்சா செடியின் மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஹாஸஸ் என்ற அதீத போதை எண்ணெய் 970மில்லி கிராம் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து அதனைப் பறிமுதல் செய்த அலுவலர்கள் அப்துலைக் கைது செய்தனர்.
பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தக்கூடிய ஹாஸஸ் எண்ணெய்யை, சட்டவிரோதமாக எங்கிருந்து கடத்திவந்தார்? தமிழ்நாட்டில் யாரிடமிருந்து இந்த போதைப்பொருட்கள் கிடைக்கின்றன? என்பது குறித்து அப்துல் கரீமிடம் அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட போதை எண்ணெய்யுடன், கைது செய்யப்பட்ட அப்துல்கரீமை மதுரை மாவட்ட போதை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிறுத்திய பின், மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர்.