மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா முத்துவீரன்பட்டியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உசிலம்பட்டி அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது! - மதுரை
மதுரை: உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
MADURAI
இதனையடுத்து, காவல் துறையினர் அய்யாசாமியின் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தோட்டத்தில் கஞ்சா செடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அய்யாசாமியை கைது செய்த காவல் துறையினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.