தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலில் நஷ்டம் - கடன் தொல்லை காரணமாக தொழிலதிபர் தற்கொலை - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: ஊரடங்கின் காரணமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் கொடுத்தவர்களை சமாளிக்க முடியாமல் தொழிலதிபர் ஒருவர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்துகொண்டார்.

தொழிலதிபர் தற்கொலை
தொழிலதிபர் தற்கொலை

By

Published : May 14, 2020, 8:12 PM IST

கரோனா தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பல்வேறு சிறு, குறு தொழில்களில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை பொன்மேனி பகுதியில் வசித்து வருபவர் இளங்கோவன் (55). இவர் அப்பகுதியில் அச்சகம் நடத்திவந்தார்.

ஊரடங்கின் காரணமாக, இவரது அச்சக தொழிலில் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், தான் கடன் வாங்கிய அனைத்து இடத்தில் இருந்தும் நெருக்கடி வரத் தொடங்கியது. இதனை தாங்க முடியாத இளங்கோவன் பூச்சிமருந்து குடித்து நேற்றிரவு(மே.13) தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதில் உயிர் போகாத நிலையில் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இளங்கோவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அங்கு சோதனை செய்ததில், அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், தான் தற்கொலை செய்துகொண்டதற்கு யாரும் காரணம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இளங்கோவனுக்கு கடன் சுமை இருந்துவந்ததால் யாரேனும் பணம் கேட்டு துன்புறுத்தியுள்ளனரா?, இது கொலையா? அல்லது தற்கொலைதானா? எனப் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கடன் பிரச்னை: அருப்புக்கோட்டையில் இளைஞர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details