தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த காரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபர்! - தீயணைப்பு துறையினர்

மதுரை: வாடிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் எரிந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் சடலமாக மீட்கப்பட்டார்.

fire accident
fire accident

By

Published : Dec 24, 2020, 10:26 AM IST

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விராலிபட்டி என்ற இடத்தில் சொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாக வாடிப்பட்டி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

பற்றி எரியும் கார்

முதல்கட்ட விசாரணை

பின்னர் காரை திறந்து பார்த்தபோது காருக்குள் தீயில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், காரில் எரிந்த நிலையில் கிடந்தவர் மதுரை ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் (58) என்பதும், அவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனமான மகாசேமம் நிறுவனத்தின் உரிமையாளர் என்பதும் பழனி சென்றுவிட்டு மதுரை திரும்புகையில் வாடிப்பட்டி அருகே இந்தச் சம்பவம் நடைபெற்றதும் தெரியவந்தது.

தீயை அணைக்கும் தீயணைப்புத் துறையினர்

இது குறித்து தகவலறிந்த மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த காரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபர்!
இது தற்கொலையா அல்லது யாரேனும் கடத்தி கொலை செய்துவிட்டு காரை தீவைத்து எரித்து சென்றுவிட்டார்களா என்ற கோணத்தில் வாடிப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details