கரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து துறை தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள் பணிக்கு செல்லாததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
உணவின்றி தவிக்கும் கட்டட தொழிலாளர்கள்! - labour suffers
மதுரை: ஊரடங்கு முடியும் வரை அத்தியாவசியப் பொருள்கள் வழங்க வேண்டும் என்று வேடர் புளியங்குளத்தில் உள்ள கட்டட தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
![உணவின்றி தவிக்கும் கட்டட தொழிலாளர்கள்! உணவின்றி தவிக்கும் கட்டிட தொழிலாளர்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6993196-thumbnail-3x2-madurai.jpg)
அந்தவகையில் மதுரை மாவட்டம் தனக்கன்குளம் அடுத்துள்ள வெங்கடாஜலபதி நகரில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் கட்டட தொழிலுக்கு சென்று தங்களது வாழ்கையை நடத்தி வந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பணிகளுக்கு செல்லாமல் வறுமையின் விளிம்பு நிலையில் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அம்மக்கள் கூறுகையில், “தமிழ்நாடு அரசு கரோனா நிவாரணமாக வழங்கிய விலையில்லா தொகுப்பும், 1000 ரூபாய் பணமும் போதுமானதாக இல்லை. மேலும் மதுரை மாநகராட்சியில் முழு ஊரடங்கு அறிவித்த நிலையில் முற்றிலுமாக உணவு பொருள்கள் இல்லாமல், குறிப்பாக குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்கும் பணம் இல்லாமல் தவிக்கிறோம். கரோனாவால் உயிரிழப்பதற்கு முன் பசியால் உயிரிழந்து விடும் நிலையில் உள்ளதால், இதுகுறித்து மாவட்டம் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.