தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகங்களுக்கு ஒப்பந்த அடிப்படை முறையில் பணியாளர்களை அனுப்பிவைத்தற்காகத் தனக்கு வழங்க வேண்டிய பாக்கி பணமான எட்டு கோடியே 76 லட்சம் ரூபாயை வழங்கக்கோரி திருச்சி பாண்டியன் என்பவரும், தனக்கு வழங்க வேண்டிய நான்கு கோடி ரூபாயை கேட்டு பொன்னுசாமி என்பவரும் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தனித்தனியே மனு தாக்கல்செய்திருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அப்போது, வழக்கறிஞர் ராஜகோபால் முன்னிலையாகி, “பிஎஸ்என்எல் நிறுவனத்தினர் பாக்கியைத் தராததால், பணியாளர்களுக்கான சம்பள பாக்கியை இன்னும் வழங்க முடியவில்லை. வருங்கால வைப்புத்தொகைகூட (பி.எஃப்.) செலுத்த முடியாத நிலை உள்ளது” என்றார்.