நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாகக் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். விவேக் மறைந்தாலும், அவர் நட்டுவைத்த மரங்கள் மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும் பலரும் விவேக் மறைவுக்குப் பின்னர் அவர் விட்டுச்சென்ற மரம் நடும் பணியைத் தீவிரமாகச் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் சக்தி - நலந்த் குமார் தம்பதிக்கு நேற்று (ஜூன் 21) திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் முடிந்த கையோடு அங்குள்ள பாண்டி கோயில் அருகே அமைந்துள்ள நான்கு வழிச்சாலையில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.