மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கும் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (21) என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி உதயகுமார் அந்த பெண்ணிடம் நெருங்கி பழகியுள்ளார்.
இதனால், கர்ப்பிணியான சிறுமி உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு உதயகுமாரிடம் கேட்டார். ஆனால் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 11) உதயகுமாருக்கும் மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. இதையறிந்த சிறுமி, இது குறித்து மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், "தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளார்" என காவல் நிலையத்தில் புகாரளித்தார்.