இலங்கையில் கடந்த வாரம் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்ததில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரயில்வே பாதுகாப்பு படை துணை ஆணையர் அருண்குமார், டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரின் உத்தரவின் பேரில் மதுரை ரயில் நிலையத்தில், தீவிர பரிசோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கோட்ட பாதுகாப்பு ஆணையர் ஜெகநாதன், மன்னர் மன்னன் மற்றும் மதுரை ரயில் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயசீலன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் உள்ளிட்டோர் பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.
மதுரை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை! - மதுரை ரயில் நிலையம்
மதுரை: இலங்கை குண்டு வெடிப்பை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதுரை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரை
மதுரை ரயில் நிலையத்தில் 70க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் டிஎஸ்பி மன்னர் மன்னன் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான 70 காவல்துறையினர், 20 வெடிகுண்டு நிபுணர்கள் காலை 7 மணி முதல் பயணிகளின் உடமைகளை சோதனை செய்து வருகிறார்கள்.