மதுரை விமான நிலைய சரக்கு முனைய பகுதியில் சென்னை செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கான பார்சல்கள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.
அதில் நாகர்கோவில், கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட பார்சலில் பார்ட்ஸ் வயர் இணைப்புடன் காணப்பட்டதால் வெடிகுண்டு என ஊழியர்கள் சந்தேகப்பட்டு உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து மத்தியப் பாதுகாப்புப் படை, மாவட்ட காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு ஊழியர்கள் கன்னியாகுமரியிலிருந்து வந்த நான்கு பார்சல்களையும் பாதுகாப்பான பையில் வைத்து விமான நிலையத்திற்கு வெளியே பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசென்றனர்.