தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் பாஜக வெற்றி பெறும் - செல்லூர் ராஜு - கோவை செல்வராஜ்

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் பாஜக வெற்றி பெற முடியும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் பாஜக வெற்றி பெறும்
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் பாஜக வெற்றி பெறும்

By

Published : Dec 10, 2022, 7:29 AM IST

மதுரை: தமிழ்நாட்டில் சொத்துவரி உயர்வு, விலைவாசி, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக அரசைக் கண்டித்தும் மதுரை பரவை பகுதியில் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, குஜராத்தைப் பொறுத்தவரை அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரின் சொந்த மாநிலம் எனவே பாஜகவுக்கு அப்பகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். காசியில் தமிழ் பற்றி பேசியதால் அப்பகுதி தமிழர்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். எனினும் கூட்டணி அமைவதை பொறுத்துதான் பாஜக வெற்றி அமையும்.

தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருகிற கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் அது பாஜக கையில்தான் உள்ளது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.

கோவை செல்வராஜ் ஏற்கனவே காங்கிரசில் இருந்தார். இப்போது திமுகவில் சேர்ந்துள்ளார். அவர் அடிக்கடி கட்சி மாறுவார் அது அவரது விருப்பம் அதிமுகவிலிருந்து கட்சி மாறியவர்கள் கூட திமுகவில் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். கட்சி மாறியவர்கள் குறித்து பேச விரும்பவில்லை எனக் கூறினார்.

இதையும் படிங்க:ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தோல்வி குறித்து மத்திய அரசிடம் தகவல் இல்லை - சு வெங்கடேசன் எம்பி

ABOUT THE AUTHOR

...view details