மதுரை மாவட்டம் சாத்தையாறு அணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அடையாள உண்ணாவிரதம் இன்று (டிச.23) நடைபெற்றது.
அப்போது அவர்கள் சாத்தையாறு அணைக்கு வைகை ஆற்றில் இருந்து பைப் லைன் மூலம் தண்ணீரை கொண்டு வந்து சாத்தையாறு அணையில் நிரந்தரமாக தண்ணீரை தேக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும் எனப் பேட்டி இந்நிலையில் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "சாத்தையாறு அணையில் நிரந்தரமாக தண்ணீரை தேக்க வேண்டுமென வலியுறுத்தினர். அதிமுகவும் பாரதிய ஜனதா கட்சியும் கொள்கை ரீதியில் ஒத்துப்போவதால் கூட்டணி தொடர்கிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும் எனப் பேட்டி ஒரு நாளாவது தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க கூடாது என்ற கொள்கையோடு, திமுக ஆட்சியில் செய்த தவறுகளை மக்கள் மத்தியில் முன்னிறுத்தி பாஜக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இன்று கொடுத்துள்ள ஊழல் பட்டியலை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க ஜனநாயகத்தில் சிஸ்டம் உள்ளது. அந்த சிஸ்டத்தின்படி நடக்க வேண்டும்.
எந்தக் கட்சி தேர்தலில் பணம் கொடுத்து வாக்கு பெற்றாலும் பாரதிய ஜனதா அதனை எதிர்க்கும்" என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிடுவதில் காங்கிரசின் பங்கு என்ன?அண்ணாமலையின் பதில்