மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக- பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 25ஆம் தேதி கோவைக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். 21ஆம் தேதி சேலத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை தருகிறார். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதிமுக - பாஜக உறுதி செய்யப்பட்ட கூட்டணி. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினால் எப்போதும் ஆட்சி அமைக்க முடியாது. அவரது கனவு கனவாகவே மாறிவிடும் என்பதே உண்மை. புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து திமுக நவீன தீண்டாமையை கையில் எடுத்துள்ளது. பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றிதான்.