மதுரை: மாரிதாஸ் மீது தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து தொடர்பாக மருத்துவர் சரவணன் பீ.பீ.குளம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தேசிய சிந்தனையாளர் மாரிதாஸ் மீது முப்படைத் தலைமைத் தளபதி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாகக் கூறி திமுக அரசு பொய் வழக்குப்பதிவு செய்தது. காவல் துறையினர் அத்துமீறி அழைத்துச் சென்று பொய் வழக்குப்பதிவு செய்தனர்.
திமுக ஆட்சிக்கு வந்தபோதே
மேலும், திமுக அரசு திட்டமிட்டு மாரிதாஸை கைதுசெய்து புனையப்பட்ட பொய் வழக்கை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது, இந்தத் தீர்ப்பில் யூ-ட்யூபர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு எனக் கூறியுள்ளது.
இந்தத் தீர்ப்பு திமுக கொடுங்கோல் அரசுக்குப் பாடமாக அமைந்துள்ளது உயர் நீதிமன்ற தீர்ப்பு, திமுக ஆட்சிக்கு வந்தபோதே மக்களுக்கு அராஜகம் நடக்கும் என அச்சம் வந்துவிட்டது.