மதுரை மாவட்டம் திருப்பாலையில் பாஜக சார்பில் பொங்கல் விழா நேற்று (ஜன. 10) நடைபெற்றது. இந்த விழாவை மதுரை பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் சுசிந்திரன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் பங்கேற்றார். அப்போது, இஸ்லாமியர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனையடுத்து, மதுரை மேலமடையில் புறநகரிலுள்ள பாஜக மாவட்டத் தலைவர் சுசிந்திரன் அலுவலகத்தை அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் சூறையாடினர். மேலும், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 30 பிளாஸ்டிக் நாற்காலிகள் சேதப்படுத்தப்பட்டதோடு, அலுவலக பேனர்களையும் கிழித்து எரிந்தனர்.