தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழர் விரோத, தேச விரோதப்போக்கை கையாண்டுவரும் திமுக' - ஜெ.பி. நட்டா தாக்கு - madurai district news

திமுக தமிழர் விரோத, தேச விரோதப்போக்கை கையாண்டுவருவதாக குற்றஞ்சாட்டிய ஜெ.பி. நட்டா, மாநிலங்களுக்கான தேவைகளை தேசியத்தோடு இணைந்து பெற வேண்டும் என்றார். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அவ்வாறே செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

BJP National leader JP Nadda addresses election campaign rally in madurai
'அதிமுகவும் பாஜகவும் இணைந்து தேர்தலைச் சந்திக்கும்'- ஜே.பி. நட்டா

By

Published : Jan 30, 2021, 10:49 PM IST

மதுரை: பாஜக தேர்தல் பரப்புரை கூட்டம் மதுரை பாண்டிகோயில் அருகே நடைபெற்றது. இதில், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா கலந்துகொண்டு பேசினார். அப்போது, "மதுரையில் பேச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. மதுரை மீனாட்சியம்மனின் ஆசிர்வாதம் கிடைத்துள்ளது.

மீனாட்சியம்மனின் ஆசிர்வாதம் பாஜகவின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும், இன்று தைப்பூசம் முடிவடைந்த அடுத்தநாளான காந்தியின் நினைவுநாளில் காந்தி மேலாடையை துறந்து மதுரையில் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ் உலகின் பழமையான மொழி. சேர, சோழ, பாண்டியர்கள் தமிழ் பண்பாடு கலாசாரத்தை மேம்படுத்த ஆட்சி செய்தனர். தமிழ்நாடு பண்பாட்டைப் போற்றி பொருளதாரத்தை வளர்த்துவருகிறது. மோடி செல்லும் இடமெல்லாம் தமிழ்மொழி குறித்தும் திருக்குறள் குறித்தும் பேசிவருகிறார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகளை மோடி அனைவரிடத்திலும் எடுத்துச் சென்றார்.

'அதிமுகவும் பாஜகவும் இணைந்து தேர்தலைச் சந்திக்கும்' - ஜெ.பி. நட்டா

திருவள்ளுவரின் திருக்குறள் ராணுவ வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. மோடி அரசு தமிழ்நாட்டில் நெசவுத் தொழிலுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் மோடியின் ஆட்சியில்தான் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. மோடி ஆட்சியின் திட்டங்கள் ஏழைகளை அதிகாரம் படைத்தவர்களாக மாற்றும் திட்டங்களே. தமிழ்நாட்டில் அதிக ஸ்மார்ட் சிட்டி உருவாக காரணம் மோடிதான்.

திமுக தமிழர் விரோத, தேச விரோதப்போக்கை கையாண்டுவருகிறது. பாஜக வேல்-ஐ கையில் எடுத்து கலாசாரத்தை காத்துள்ளது. மாநிலங்களுக்கான தேவைகளை தேசியத்தோடு இணைந்து பெற வேண்டும். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அவ்வாறே செயல்பட்டார்கள். வரும் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து எதிர்கொள்ளும். தமிழ்நாடு வளர்ச்சியில் அதிமுகவும்-பாஜகவும் இணைந்து செயல்படும்.

தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும், தமிழ்நாட்டில் தாமரை மலர பாடுபட வேண்டும், தமிழ்நாட்டை தேசிய நீரோட்டத்தில் இணைக்க பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தால் நீங்கள் முன்னேறுவீர்கள்" என்றார்.

இதையும் படிங்க:தெலங்கானா ஆளுநர் தமிழிசை மதுரைக்கு திடீர் வருகை

ABOUT THE AUTHOR

...view details