தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார்'- நடிகை குஷ்பு - மதுரை தெப்பக்குளத்தில் பாஜக பொங்கல் விழா

மதுரை: வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் ஆக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளேன் என நடிகை குஷ்பு கூறினார்.

kushboo
kushboo

By

Published : Jan 9, 2021, 1:58 PM IST

பாஜக சார்பில் மதுரை தெப்பக்குளத்தில் நம்ம ஊர் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாஜக பெரிய அளவில் தமிழ்நாட்டில் வளர்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு யாரும் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மோடி ஒருவர் குரல் கொடுத்தால் போதும்.

ஒவ்வொரு தெருக்களிலும் பாஜகவின் கொடி பறக்கிறது என்பதில் மாற்றமில்லை. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆக இருந்தாலும் சரி யாரோடும் போட்டியிடுவதற்கு நான் தயாராக உள்ளேன். உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு என்பது கண்டனத்துக்குரியது. கமலுக்கு எதிராக நான் பேசவில்லை. இல்லத்தரசிகள் நாள்தோறும் அவர் தம் இல்லங்களில் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது அன்பின் காரணமாக இந்தப் பணிகளை செய்கிறார்கள். ஊதியத்தை எதிர்பார்த்து அல்ல.

நடிகை குஷ்பு பேட்டி

பெண்களுக்கு எதிராக யார் பாலியல் வன்கொடுமை செய்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடி பெண்கள் முன்னேற்றத்திற்காக பேசியும், பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார். திருமாவளவன் சர்ச்சையாக பேசுவதே அவருடைய கொள்கை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய கொள்கை ஏதேனும் அவரிடம் இருந்தால் அதை பேசச் சொல்லுங்கள்" என்றார்.

இதையும் படிங்க:புரெவி புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details