மதுரை, கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணிக்கு வந்து செல்லும் நேரத்தையும், வருகையையும் உறுதிப்படுத்தும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை நடைமுறையில் இல்லை. பதிவேட்டில் கையெழுத்திடும் பழைய முறையையே பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மருத்துவர்களின் பணி நேரம் வெளிப்படைத்தன்மை இல்லாததோடு, பணிக்கு தாமதமாக வருவது, தேவைப்படும் நேரத்திற்கு வெளியே செல்வது போன்றவை நடைபெறுகின்றன.
அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் முறை - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - latest update in madurai
மதுரை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவிற்கான அரசாணையை நடைமுறைப்படுத்த ஏப்ரல் 24 வரை அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012 செப்டம்பர் 20இல் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ESI மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறையை பயன்படுத்த வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே 2012இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2017 ஜனவரி 25இல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவிற்கான அரசாணையை 4 மாதத்தில் முறையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆகவே, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் உத்தரவை நடைமுறைப்படுத்த 6 மாத காலம் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. அதையேற்க மறுத்த நீதிபதிகள், 3 மாத கால அவகாசம் வழங்கியும், உத்தரவை நடைமுறைப்படுத்தியது தொடர்பாக ஏப்ரல் 24இல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.