தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாரத் தர்ஷன்' சுற்றுலா ரயில் - இந்தியாவின் சுற்றுலா தளங்களை காண அரிய வாய்ப்பு

இந்திய ரயில்வே உணவு, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக மதுரையில் இருந்து பாரத் தர்ஷன் என்ற சுற்றுலா ரயில் இந்தியாவின் பெரிய சுற்றுலாத் தளங்களை காண அரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

'Bharat Darshan' Tourist Train
'Bharat Darshan' Tourist Train

By

Published : Jul 30, 2021, 7:07 PM IST

மதுரை : இந்திய ரயில்வே உணவு, சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக "பாரத் தர்ஷன்" என்ற பெயரில் சுற்றுலா ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது பாரத் தர்ஷன் சிறப்பு ரயில் மூலம் மதுரையிலிருந்து ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை வழியாக தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ், ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர், குஜராத் மாநிலத்தில் உள்ள மகாதேவர் கடல் கோயில், சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை ஆகியவற்றிற்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

'பாரத் தர்ஷன்' சுற்றுலா ரயில்
இந்த சுற்றுலா ஹைதராபாத்தில் உள்ள அருங்காட்சியகங்கள், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில், ஜாலியன் வாலாபாக் நினைவு சின்னம் ஆகிய முக்கிய சுற்றுலாத் தளங்களையும் கண்டுகளிக்க வழிவகை செய்கிறது. சைவ உணவு, தங்குமிடம், ரயில் கட்டணம், உள்ளூர் போக்குவரத்துச் செலவு ஆகியவை உட்பட இந்த 12 நாள் சுற்றுலாவுக்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 11 ஆயிரத்து 340 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
'பாரத் தர்ஷன்' சுற்றுலா ரயில்
கரோனா தொற்றை தவிர்க்க ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு இந்த சுற்றுலா நடத்தப்படுகிறது. இந்த சுற்றுலாவிற்கு ஒன்றிய மாநில அரசு ஊழியர்கள் எல்டிசி வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சுற்றுலாவிற்கான பயணச்சீட்டு பதிவு செய்ய 8287931977 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

ABOUT THE AUTHOR

...view details