தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’’கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வு நடைபெறும்’’- அமைச்சர் தங்கம் தென்னரசு - madurai latest news

சிவகங்கை: கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தேவையைப் பொறுத்து நடைபெறும் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

By

Published : Jun 12, 2021, 8:23 PM IST

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும், தொல்லியல் துறையினர் ஆய்வு பணிகளை தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜூன். 11) நேரில் பார்வையிட்டார். அவருடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன் மானாமதுரை சட்டப்பேரவைத் உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், ’’தற்போது, கரோனா பொது முடக்கத்திற்கு பிறகு ஏழாம் கட்ட ஆய்வு பணிகள் கீழடியில் தொடங்கியுள்ளன. புதியக் கற்காலம் தொடங்கி கீழடி நாகரிகம் தொடர்ந்து இங்கே இருந்து வந்துள்ளது. அந்தக் காலங்களைச் சேர்ந்த பல்வேறு தொல்பொருட்கள் இங்கே கிடைத்துள்ளன. காதணிகள் விளையாட்டுப் பொருட்கள் பானை ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் என அனைத்தும் கிடைத்துள்ளன.

’’கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வு நடைபெறும்’’- அமைச்சர் தங்கம் தென்னரசு
ஏழாம் கட்ட அகழாய்வில் ஏறக்குறைய 700க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. நகர நாகரிகம் என்பது கங்கைச் சமவெளியில்தான் இருந்தது என்ற கருதுகோளை உடைத்து வைகைக்கரையிலும், அது போன்ற நாகரீகங்கள் இருந்துள்ளன என்பதை கீழடியே உறுதிப்படுத்தியுள்ளது. தமிழர்களின் நாகரீகம் என்பது காலத்தால் முற்பட்டதாகும் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு நாகரீகமாக கீழடி திகழ்ந்து வருகிறது.இதுதொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தூத்துக்குடி மாவட்டம் கொற்கை, ஆதிச்சநல்லூர் சிவகளை ஆகிய பகுதிகளிலும் கொடுமணல் பொருந்தல் கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மூன்று கட்டமாக நடைபெற்ற கீழடி அகழாய்வு குறித்து அறிக்கையையும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையையும் கேட்டுள்ளோம். தற்போது, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு இந்த ஆய்வு அறிக்கைகளை விரைவாக வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக சிறப்பான வகையில் அருங்காட்சியகத்தை அமைக்க திட்டமிட்டு வருகிறோம். பல்வேறு வகையான கேலரிகள் அங்கு அமைக்கப்படவுள்ளன கீழடி அகழாய்வை தொடர்ந்து தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செல்லும்.

அதுமட்டுமல்லாமல், எட்டாம் கட்ட அகழாய்வு தேவையைப் பொறுத்து பணிகள் தொடரும். கடந்த ஆறு கட்ட அகழாய்வுகளும் அப்படித்தான் நடை பெற்றுள்ளன’’ என்றார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் கரோனா தடுப்பூசி முகாம்: நகராட்சி ஆணையர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details