தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். அவர் தற்போது மதுரையில் வசித்துவருகிறார். மதுரையில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தும் அவர், தான் யாசகம் பெற்றப் பணத்தை கரோனா நிவாரண நிதியாகக்காக வழங்கிவருகிறார்.
அதன்படி மே மாதம் ரூ. 10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய்யிடம் வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் மூன்று முறை ரூ.10 ஆயிரம் என ரூ.40 ஆயிரத்தை கரோனா நிதிக்காக வழங்கினார்.
இந்த நிலையில் இன்று(ஜூலை 10) மீண்டும் ரூ. 10ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். அப்படி இதுவரை அவர் ரூ. 50 ஆயிரம் வழங்கியுள்ளார். அதனால் அவரைப் பல்வேறு தரப்பினர் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர். மேலும் அவர் தனது மனைவியின் உயிரிழப்பிற்கு பின் இப்படி பொது சேவையில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.
கரோனா நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர் நிவாரண நிதி மட்டுமல்லாமல் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் காமராஜர் பிறந்த நாளன்று பள்ளிகளுக்குச் சென்று நிதி உதவி வழங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க:கரோனா நிவாரண நிதிக்காக ரூ.10,000 வழங்கிய பிச்சைக்காரர்!