தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 29, 2021, 5:36 PM IST

ETV Bharat / state

1 முதல் 8ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பது உறுதி... அமைச்சர் விளக்கம்...

புதிய வகை கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், 1 முதல் 8ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

மதுரை:தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷம், கர்நாடக மாநிலங்களில் ஏஒய்.4.2 வகை கரோனா தொற்று பரவிவருகிறது.

அதனால் பள்ளிகளை மூட அம்மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏஒய்.4.2 வைரஸ், கரோனாவைவிட 6 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என மத்திய சுகாரதரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படுமா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், "நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி. இருப்பினும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயமில்லை. பெற்றோரின் விருப்பப்படி பள்ளிக்கு வரலாம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஏஒய்.4.2 வகை கரோனா பரவல்... பள்ளிகளுக்கு விடுமுறை?

ABOUT THE AUTHOR

...view details