மதுரை:புதுக்கோட்டை அம்மானிப்பட்டை சேர்ந்த சாமிகண்ணு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "நான் ஒரு மாற்றுத்திறனாளி. இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், எனது மனைவி விஜயராணி குடும்பத்தை கவனித்து வந்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு அவரது சகோதரர் இறப்பின் எட்டாம் நாள் காரியத்திற்காக சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது மேட்டுப்பட்டி பேருந்து நிலையம் அருகே, முத்துவீரப்பன் என்பவருக்காக வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் விழுந்ததில் எனது மனைவி படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இதனால் எங்கள் குடும்பம் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறது. ஆகவே எனது மனைவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீதும், அலுவலர்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுப்பதோடு, எனது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், தஞ்சை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:அடித்தட்டு மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் செயல்படுவேன் - தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி