தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிப்பதற்காக நாகர்கோவில்-பெங்களூரு மற்றும் கொச்சுவேலி-தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது. நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில் (06052) அக்டோபர் 25 அன்று நாகர்கோவிலில் இருந்து இரவு 07.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு பெங்களூர் சென்று சேரும். மறு மார்க்கத்தில் பெங்களூரு - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06051) பெங்களூருவில் இருந்து அக்டோபர் 26 அன்று காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 12.20 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.