தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: வெகு விமர்சையாக நடந்த பாலாலயம்!

Madurai Meenakshi Amman Temple Balalayam Pooja: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலயம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

palalaya pooja for madurai meenakshi amman temple kumbabishekam
மீனாட்சி அம்மன் கோயில் பாலாலயம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 7:21 PM IST

மீனாட்சி அம்மன் கோயில் பாலாலயம்

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 2022-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் சுவாமி சன்னதி அருகேயுள்ள வீரவசந்தராயர் மண்டபம் சேதம் அடைந்தது. அந்த மண்டபத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் கும்பாபிஷேக பணிகளை தொடங்க வேண்டும். இதன் காரணமாக 25 கோடி ரூபாய் மதிப்பில் மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் புனரமைக்கப்பட்டு பின்னர் 2 ஆண்டுகளுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக இன்று பாலாலய பூஜை நடைபெற்றது. இதற்காக சுவாமி சன்னதி, 2ஆம் பிரகாரம், நவக்கிரக சன்னதி அருகில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு நேற்று காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தியுடன் பூஜையும் நேற்று மாலை முதல் இரவு வரையிலும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து இன்று காலை காலை 7 மணி முதல் 9 மணி வரையில் 2ஆம் கால பூஜைகள் நடைபெற்று நவகிரக சன்னதி அருகே 5 கோபுரங்களுக்காக 5 யாக குண்டம் அமைக்கப்பட்டு 2 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. புனித நீர் கலசங்கள் 2-ஆம் பிரகாரம் வலம் வந்து உற்சவர் சாமி சன்னதியில் கோலால பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அங்கு மாம்பலகையில் கோபுரங்களை வரைந்து வைத்து அதற்கு பூஜை செய்து புனித நீர் ஊற்றி பாலாலயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு நடைபெற்ற பாலாலய நிகழ்வில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பாலாலயம் நடைபெற்றதை தொடர்ந்து கோயில் கோபுரங்கள் உள்ளிட்ட கோயிலில் உள்ள அனைத்துவித மராமத்து பணிகள் தொடங்கவுள்ளன.

இதையும் படிங்க: வெளிநாடுகளிலிருந்து எம்.லாட் முறையில் இந்தியா திரும்பும் பழங்கால சிலைகள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details