தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறையிலிருந்து வந்த கட்சி பிரமுகருக்கு பாலபிஷேகம் - வைரல் காணொலி - கட்சி பிரமுகருக்கு பாலபிஷேகம்

மதுரை மத்தியச் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த மருது சேனை கட்சியின் பிரமுகருக்கு அவரது ஆதரவாளர்கள் குடம் குடமாய் பாலபிஷேகம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

சிறையிலிருந்து வந்த கட்சி பிரமுகருக்கு பாலபிஷேகம்
சிறையிலிருந்து வந்த கட்சி பிரமுகருக்கு பாலபிஷேகம்

By

Published : Feb 18, 2022, 3:09 PM IST

மதுரை:கடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணியில் மருது சேனை கட்சி போட்டியிட்டது. வேட்பாளராக அக்கட்சியின் முக்கியப் பிரமுகர் ஆதிநாராயணன் போட்டியிட்டார்.

அதே தொகுதியில் போட்டியிட்ட வருவாய்த் துறை முன்னாள்அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராகக் கடும் பரப்புரை மேற்கொண்டார். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் கொலை வழக்கு காரணமாக மதுரை மத்தியச் சிறையில் ஆதிநாராயணன் அடைக்கப்பட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறையில் ஆதிநாராயணனை முன்னிலைப்படுத்தி கலவரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அக்குறிப்பிட்ட கொலை வழக்கில் ஆதி நாராயணனுக்குப் பிணை கிடைத்த நிலையில், நேற்று (பிப்ரவரி 17) சிறையிலிருந்து வெளியே வந்தார்.

அப்போது அவரது ஆதரவாளர்கள் பெரும் திரளாகத் திரண்டுவந்து வரவேற்பு கொடுத்தனர். அதுமட்டுமன்றி குடம் குடமாய் அவர் மீது பாலைக் கொட்டி அபிஷேகம் செய்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட ஆளுயர மாலைகளை அணிவித்து ஆதிநாராயணனுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

சிறையிலிருந்து வந்த கட்சி பிரமுகருக்கு பாலபிஷேகம்

மதுரை மத்திய சிறையிலிருந்து புறப்பட்ட அவரது ஆதரவாளர்களுடனான பேரணி, மதுரை தோப்பூர் சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும்போது எவ்வித தடையுமின்றி கார்களின் பவனி சென்றதை பொதுமக்கள் மிகுந்த வியப்புடன் பார்வையிட்டனர். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இளையராஜா பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த தடை - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details