நவம்பர் புரட்சியை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணியில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி மதுரை வந்திருந்தார்.
அப்போது நமது ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், "தொழிலாளர்களுக்காக ரஷ்யாவில் நடைபெற்ற நவம்பர் புரட்சி, உலகத்திற்கே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் புரட்சியின் விளைவாகத்தான் உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் விடிவு காலம் பிறந்தது.
தமிழ்நாட்டில் பாரதியாரிலிருந்து, வ.உ.சி., திருவிக வரை இதனை யுகப்புரட்சியாகவே வர்ணித்தனர். அதன் நூற்றாண்டு விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது. இந்தியாவில் வரலாறு காணாத அளவில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை நூறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.