மதுரையில் வாழும் இஸ்லாமியர்களுக்கு திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் அவுலியா தர்கா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கு பல்வேறு நோய்கள் நீங்க வேண்டி சிறப்புத் தொழுகைகள் நடைபெறுவது வழக்கம்.
கரோனா பெருந்தொற்று காரணமாக திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தர்காவில் தொழுகைகள் நடைபெறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தர்காவில் பக்ரீத் சிறப்பு தொழுகை இந்நிலையில், வழிபாட்டுத் தலங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், ஓராண்டிற்கு பிறகு இன்று (ஜூலை.21) பக்ரீத்தை முன்னிட்டு சிறப்பு தொழுகைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு கரோனாவின் பிடியிலிருந்து உலகம் விடுபட வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
இதையும் படிங்க: கோவிட் - 19: மெக்காவில் வழிபட மீண்டும் தளர்வுகள் அறிவிப்பு