தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமாவை திட்டிய புகார் - முன்ஜாமின் கேட்டு பாஜக பிரமுகர் மனு - எவ்விதமான உள்நோக்கமும் இல்லை

இந்துக்கள் தொடர்பான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கருத்துக்கு மிரட்டும் வகையில் பதில் அளித்த விவகாரத்தில் முன் ஜாமின் கோரி பாஜகவின் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்

திருமாவளவனின் கருத்துக்கு மிரட்டும் வகையில் பதிலளித்த பாஜக பிரமுகர் முன் ஜாமின் கோரி மனு
திருமாவளவனின் கருத்துக்கு மிரட்டும் வகையில் பதிலளித்த பாஜக பிரமுகர் முன் ஜாமின் கோரி மனு

By

Published : Oct 11, 2022, 8:03 PM IST

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிகழ்வு ஒன்றை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரனிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்தது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் மிரட்டல் விடும் விதமாக பேசினார். இது தொடர்பாக, சுசீந்திரன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுசீந்திரன், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில், "அன்றைய தினம் கோபம் மற்றும் உணர்வு பெருக்கின் காரணமாகவே அவ்வாறு பேசியதாகவும், அதில் எவ்விதமான உள்நோக்கமும் இல்லை, நீதிமன்றம் அளிக்கும் நிபந்தனைக்கு முழுவதுமாக கட்டுப்படுவேன் ஆகவே இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: மின் கட்டண உயர்வை கண்டித்து புதிய தமிழகம் கட்சி போராட்டம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details