தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழடி ஆய்வு: கொந்தகையில் மீண்டும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு..! - கொந்தகையில் மீண்டும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு

மதுரை: கீழடி தொல்லியல் ஆய்வின் தொடர்ச்சியாக கொந்தகையில் நடைபெற்றுவரும் அகழாய்வில் இன்று (ஜுலை 7) மீண்டும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது.

baby skeleton found in keezhadi Archaeological Survey
baby skeleton found in keezhadi Archaeological Survey

By

Published : Jul 8, 2020, 12:30 AM IST

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த முறை கூடுதலாக கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அகழ்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இங்கு 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கல் கட்டுமானம், விலங்கின் எலும்பு ஆகியவை கிடைத்துவந்த நிலையில் கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கொத்துக்கொத்தாய் கிடைத்தன.

இதற்கிடையே கடந்த ஜூன் 18ஆம் தேதி 75 சென்டிமீட்டர் நீளமுள்ள குழந்தையின் எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது 90 சென்டி மீட்டர் நீளமுள்ள மற்றொரு குழந்தையின் எலும்புக்கூடும் கண்டறியப்பட்டிருக்கிறது.

தற்போது கண்டறியப்பட்டுள்ள இரண்டு எலும்புக்கூடுகளும் மரபணு ஆய்வுக்காக பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து நடைபெறும் மூலக்கூறு ஆய்வின்போதுதான் அந்த எலும்புக்கூட்டின் காலமும் பாலினமும் தெரியவரும் என அகழாய்வு பணியின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க... கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பெரிய அளவிலான எலும்புக்கூடு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details