திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் அவ்வப்போது ஏதேனும் பரபரப்பை கிளப்பும் வகையில் அழகிரி திமுகவுக்கு எதிராகவும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துவருகிறார்.
அண்மையில் அவரது ஆதரவாளர்களைக் கூட்டி திமுகவுக்கு நேரடியாகச் சவால்விட்டார். ஜனவரி 30ஆம் தேதி மு.க. அழகிரியின் பிறந்தநாள் என்பதால் மதுரை நகர் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் திமுகவை மிரட்டும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டி அமர்க்களப்படுத்தி உள்ளனர்.