மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அவனியாபுரம் சாலையில் தியாகராஜர் கல்வியியல் கல்லூரி, லட்சுமணா மருத்துவமனை சார்பாக சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்கவும் நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.
சுற்றுப்புறத்தை பாதுகாத்தல் குறித்து கல்லூரி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி! - விழிப்புணர்வு பேரணி நடத்திய தியாகராஜன் கல்லூரி மாணவர்கள்
மதுரை: திருப்பரங்குன்றத்தில் சுற்றுப்புறத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடையே தியாகராஜர் கல்வியல் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கல்லூரி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி
இப்பேரணியானது திருப்பரங்குன்றத்தில் இருந்து அவனியாபுரம், முத்துப்பட்டி வரை பேரணியாகச் சென்று சாலைகளில் சிதறிக் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவாமல் இருக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: நீரிழிவு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பேரணி!