தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கும் முகாம் தொடக்கம்

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு டோக்கன் வழங்கும் முகாம் நடைபெற்றுவருகிறது.

மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கும் முகாம் தொடக்கம்
மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கும் முகாம் தொடக்கம்

By

Published : Jan 13, 2020, 2:48 PM IST

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு டோக்கன் வழங்கும் முகாம் இன்று தெற்கு வட்டாச்சியர் அனிஸ் சத்தார் தலைமையில் தொடங்கியது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு 40க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு டோக்கன் வழங்கப்படவுள்ளது.

முன்பதிவு டோக்கன் பெற விரும்பும் மாடுபிடி வீரர்கள், தங்களது ஆதார் அட்டையின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்முகாம் அவனியாபுரத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெறுகிறது.

மாடுபிடி வீரர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்

நகர் நல அலுவலர் செந்தில் தலைமையிலான 10 பேர் கொண்ட மருத்துவக் குழு மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனையை செய்து மதுரை மாவட்ட தெற்கு வட்டாச்சியர் அனிஸ் சத்தார் தலைமையில் முன்பதிவு டோக்கன் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: வாடிவாசலில் வண்ணம் பூசும் பணிகள் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details