தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு - முதலமைச்சர் சிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்குகிறார்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்து விளையாடும் காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. அதேபோன்று சிறந்த மாடுபிடி வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பாகவும் கார் பரிசாக வழங்கப்படுகிறது.

avaniyapuram jallikattu cm stalin and udhayanidhi gifts car for best bull and best rider
avaniyapuram jallikattu cm stalin and udhayanidhi gifts car for best bull and best rider

By

Published : Jan 14, 2022, 12:50 PM IST

மதுரை:பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டியில் 700 காளைகளும், 300 மாடு பிடி வீரர்களும் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது வரை 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 325 காளைகளும், வீரர்கள் சுமார் 130 பேரும் களமிறங்கியுள்ளனர். இதுவரை 11 காளைகளைப் பிடித்த வீரர் வலையங்குளம் முருகன் முதலிடத்திலும், 8 காளைகளைப் பிடித்த அவனியாபுரம் கார்த்தி 2-ஆவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை 29 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

வணங்குவோம் சூரியனை! வாழ்த்துவோம் உழவரை ! - ஸ்டாலினின் பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்...

இந்நிலையில் அனைத்து சுற்றுகளின் முடிவில் சிறந்த காளைக்குத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாகவும், சிறந்த வீரருக்கு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பாகவும் கார்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன. இதில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, வீரர்கள் துள்ளிப்பாய்ந்து அடக்கும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

போட்டி தொடங்கும் முன் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே களத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளக் கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான அனுமதிச்சீட்டுடன் ஒரு உதவியாளர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீறிப்பாயும் காளைகள்... அடக்குவதற்கு துள்ளிப்பாயும் வீரர்கள்.

இதையும் படிங்க : 'இவன் என் மகன்! கண்ணும் கருத்துமாக வளர்க்கிறேன்'- ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பாளர் கண்ணகி பேட்டி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details