தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வேண்டும்' - தீர்ப்பு ஒத்திவைப்பு!

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை கடந்த ஆண்டு போல் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் வழக்கறிஞர்களைக் கொண்ட குழு நடத்துவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கபடும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிப்பதற்காக நீதிபதிகள் திங்கட்கிழமைக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

Avaniapuram jallikattu needs all community people participation
Avaniapuram jallikattu needs all community people participation

By

Published : Jan 10, 2020, 11:14 PM IST

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் உட்பட பலர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக் கமிட்டிக்கு தலைமை வகிப்பவர், கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருந்து வருகிறார். கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை, யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தனது குடும்ப விழாபோல் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பங்கெடுக்க ஆதிதிராவிட சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்நிலை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டினை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், ஆர்வமும், பங்கெடுப்பும் குறையும். எனவே, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக்குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்ததுபோது, அனைத்து சமூகத்தினரையும் கொண்ட ஜல்லிக்கட்டு விழா குழுவினை அமைத்து ஜல்லிக்கட்டை நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள் கடந்த ஆண்டைப் போல ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் நீதிமன்றமே குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என கருத்து தெரிவித்து, இதுதொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:

'தமிழரின் பொங்கல் கலாசாரம் பெருமை மிக்கது' - வியக்கும் சீன மாணவிகள்

ABOUT THE AUTHOR

...view details