தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை காவல் துறையைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் ஆர்ப்பாட்டம் - auto drivers protest against madurai police officers at perambalur

பெரம்பலூர்: ஆட்டோ ஓட்டுநர் அரிச்சந்திரனை தற்கொலைக்குத் தூண்டிய மதுரை காவல் துறையைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

By

Published : Feb 11, 2020, 2:00 PM IST

பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காந்தி சிலை முன்பு, மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அரிச்சந்திரனை தற்கொலைக்குத் தூண்டிய மதுரை மாநகர காவல் துறையைக் கண்டித்து பெரம்பலூர் அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்டோ ஓட்டுநர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டமானது சிஐடியு சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது. இதில், தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்சூரன்ஸ், மின்துறை, வங்கி, ரயில்வே உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறைகளும் மக்கள் துறையாகவே நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்... 6 பேர் கைது!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details