மதுரை மாவட்டம் கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிவரக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியான 9 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாக கள்ளிக்குடி காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்ற ஆட்டோ டிரைவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை - Auto driver sentenced to seven years
மதுரை:ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற ஆட்டோ டிரைவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆட்டோ டிரைவரு
இந்நிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீபதிகள், ஆட்டோ டிரைவர் பாலமுருகன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.