தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டோ ஓட்டுநர் இறப்பில் மர்மம்; போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு! - ஆட்டோ ஓட்டுநர் சாவுட

மதுரை: காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு, காவல் துறையினர் தான் காரணம் என அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

auto

By

Published : Jun 30, 2019, 1:58 PM IST

மதுரை, பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணைக்காக மணிகண்டனை கரிமேடு காவல் துறையினர் நேற்று மாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், நள்ளிரவு திடீரென உடல்நிலை சரியில்லாமல் உடனடியாக அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் மர்மச் சாவு

அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அழைத்து வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞரைக் காவல் துறையினர் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details