ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் சாரா லூயிஸ் வெர்கீவர். இவர் தன்னுடைய நண்பர்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரைக்கு சுற்றுலா வந்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றபோது, நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்ற இளைஞர் மதுபோதையில் தன்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள வருமாறு கூறி அந்தப்பெண்ணைக் கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு அப்பெண் மறுக்க அவரிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளார் ஸ்ரீதரன்.
எல்லீஸ் நகர் காவல் துறை அலுவலகம் இதில் அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டுவந்த அப்பகுதி மக்கள் போதையிலிருந்த ஸ்ரீதரனைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஸ்ரீதரன் மீது, எல்லீஸ் நகர் காவலர்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுற்றுலா வந்த ஆஸ்திரேலியா பெண்ணிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எஸ்.ஐ போல் நடித்து பணம் வசூல் செய்த துணை நடிகை கைது!