தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மாநகராட்சியில் 2 ஆண்டுகளாக நடைபெறாத கணக்குத் தணிக்கை பணி - RTI-யில் அம்பலம்! - மதுரை

மதுரை மாநகராட்சியில் 2 ஆண்டுகள் தணிக்கை கணக்குகள் பணி நடக்கவில்லை எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் இரண்டாண்டுகளாக நடைபெறாத கணக்குத் தணிக்கை பணி - ஆர்டிஐ தகவல்
மதுரை மாநகராட்சியில் இரண்டாண்டுகளாக நடைபெறாத கணக்குத் தணிக்கை பணி - ஆர்டிஐ தகவல்

By

Published : Apr 19, 2022, 10:24 PM IST

Updated : Apr 19, 2022, 10:57 PM IST

மதுரை மாநகராட்சியில் ஆண்டுதோறும் பட்டய கணக்காளர் மூலம் வரவு, செலவு கணக்குகளை தணிக்கை செய்வது வழக்கம். எனவே, மதுரை சமூக ஆர்வலர் ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக மதுரை மாநகராட்சி வரவு செலவு கணக்குத் தணிக்கை தொடர்பான ஆவண நகல்களை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.

மதுரை மாநகராட்சியில் 2 ஆண்டுகளாக நடைபெறாத கணக்குத் தணிக்கை பணி - RTI-யில் அம்பலம்!

இதற்கு மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் (கணக்குகள்) பதில் அளித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன்படி "மதுரை மாநகராட்சியில் கடந்த 2019-20, 2020-21 ஆகிய நிதி ஆண்டுகளில் பட்டயக் கணக்காளர் மூலம் வரவு, செலவு கணக்குகள் தணிக்கை செய்யவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் கடந்த 2019-20, 2020-21 ஆகிய நிதியாண்டில் பட்டயக் கணக்காளர் ( Auditor ) அவர்களை கொண்டு நிதி தணிக்கை நடக்கவில்லை.

இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் ஹக்கீம் கூறுகையில், ”மதுரை மேயர் இந்திராணி தனது முதல் கூட்டத்தில் முதல் பேச்சாக மதுரை மாநகராட்சி கடுமையான நிதிப்பற்றாக்குறையில் இருக்கின்றது. மின்சார வாரியத்திற்கு ரூ.52 கோடி, அரசு திட்டங்களுக்கான மூலதன பங்கிற்கு ரூ.67 கோடி, சாலை போட்ட வகையில் ரூ.100 கோடி, மாநகராட்சி ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிதி பற்றாக்குறையில் ரூ.86 கோடி, கரோனா காலத்தில் கூடுதல் செலவாக ரூ. 31 கோடி ஆக மதுரை மாநகராட்சி ரூ.730 கோடி கடனில் இருப்பதால் சொத்து வரியை 150 சதவீதம் அதிகரிப்பு செய்து கடன் சுமையை சரி செய்வதாக சொல்கின்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டய கணக்காளர் மூலம் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்யாமலேயே கடன் சுமையை மட்டும் எப்படி சரியாக கூறுகிறார் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது” என்றார்.

மதுரை மாநகராட்சியில் 2 ஆண்டுகளாக நடைபெறாத கணக்குத் தணிக்கை பணி - RTI-யில் அம்பலம்!

ஆகையால் மதுரை மாநகராட்சிக்கான கணக்குத் தணிக்கையை உடனடியாக செய்து அதன் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க:'விக்ரம்' படத்திற்கு புதிய விளம்பர யுக்தி: பான் இந்தியா பட ஆசையில் கமல்..?

Last Updated : Apr 19, 2022, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details