தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Audio Leak - 'மீனாட்சி அம்மன் கோயிலில் திருநீறு விற்றவர் செல்லூர் ராஜு' - செல்லூர் ராஜு ஆடியோ

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு அலைபேசி மூலம் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், செல்லூர் ராஜூவை புகழ்வதுபோல இகழ்ந்து கிண்டலடித்து பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு ஆடியோ

By

Published : Jun 6, 2022, 11:09 PM IST

மதுரை:கடந்த சில நாள்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாஜகவையும், அக்கட்சியைச் சேர்ந்த மாநிலத் தலைவர் அண்ணாமலையையும் செய்தியாளர் சந்திப்பில் மிகக்கடுமையாக பேசியிருந்தார். இந்நிலையில் சுரேஷ்குமார் என்ற நபர் ஒருவர் செல்லூர் ராஜு உடன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், செல்லூர் ராஜு-வை புகழ்வது போன்று அவரை வஞ்சப்புகழ்ச்சி செய்தவாறே தொடர்ந்து உரையாடினார். அந்த உரையாடலின் போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செல்லூர் ராஜு திருநீறு விற்றவர் என்றும்;தெர்மகோல் மூலமாக தமிழ்நாட்டில் விஞ்ஞானியாக புகழ் பெற்றீர்கள் என்று பேசியதோடு, அண்ணாமலை ஐபிஎஸ் படித்தவர், நீங்கள் வெறும் மூன்றாம் வகுப்பு படித்தவர் தானே என தொடர்ந்து செல்லூர் ராஜுவிடம் கோபப்படும் வார்த்தைகளால் உரையாடினார். அத்துடன் தொலைபேசி உரையாடல் துண்டிக்கப்பட்டுவிட்டது.

செல்லூர் ராஜு வைரல் ஆடியோ

இந்த உரையாடல் ஒரு நிமிடம் 16 நொடிகள் என்ற போதும் கூட , முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை காயப்படுத்தும் நோக்கத்தோடு பேசப்பட்டது போல் தெரிகிறது. செல்லூர் ராஜூ தரப்பில் இது குறித்து கேட்டபோது இப்படி ஒரு தொலைபேசி வந்தது என்பது உண்மை என்பதோடு நிறுத்திக் கொண்டு விட்டனர். மேற்கொண்டு அது குறித்து எந்தவித கருத்தும் அவர் தெரிவிக்கவில்லை; தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:'செவிடன் காதில் சங்கு ஊதியது போல் மெத்தனமாக செயல்படுகிறது தமிழ்நாடு அரசு' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details