மதுரை ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவர் நேற்று தனது தங்கை மகன் சுரேஷ் உடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் சீதாலட்சுமியை சரமாரியாக வெட்டினர். அப்போது தடுக்கச் சென்ற சுரேஷுக்கும் வெட்டு விழுந்தது. உடலில் பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்ததால், சீதாலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில்பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
மதுரையில் வீடு புகுந்து பெண் வெட்டிப் படுகொலை; குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! - madurai police
மதுரை: வீடு புகுந்து பெண் ஒருவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயத்தோடு இருந்த சுரேஷை மீட்டு, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடல்புதூர் காவல் துறையினர், சீதாலட்சுமியின் உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கூடல் புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.