தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கைது - குற்றச் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணி செய்து வரும் இடைநிலை ஆசிரியர் ராமச்சந்திரன் கடந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற நிலையில், பண மோசடி வழக்கு ஒன்றில் சிபிஐ அவரை கைது செய்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 27, 2023, 7:22 PM IST

ராமநாதபுரம் சத்திரக்குடி அருகே கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக ராமச்சந்திரன் (38) பணி புரிந்து வருகிறார். இவருக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இவரது சகோதரர் பஞ்சாட்சரம் என்பவர் Tax Information Network என்ற நிறுவனத்தை மதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நடத்தி வருகிறார்.

இதன் மூலம் Incomtax E file செய்யும்போது அதிகமான நபர்களுக்கு குறைவாக கணக்கு காண்பித்து பணம் திரும்ப பெற்றுக் கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக ரூ. 2 கோடியே 84 லட்சம் திரும்ப பெற்றுக்கொடுத்ததாக வருமான வரித்துறையினர் புகாரின் பேரில் CBI கடந்த 2021ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து, 2022ஆம் ஆண்டு பஞ்சாட்சரத்தை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி, தற்போது பிணையில் உள்ளார்.

இந்நிலையில் ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு அவரது சகோதரர் ரூ.12 லட்சத்தை வங்கி மூலம் அனுப்பியுள்ளார். மேலும், இருவருக்கும் வங்கி மூலம் பணப் பரிவர்த்தனைகள் இருப்பதால் நல்லாசிரியர் விருது பெற்ற ராமச்சந்திரனை சிபிஐ காவல் துறையினர் கைது செய்து மதுரை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். இந்நிலையில் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இதையும் படிங்க:ஹரி நாடார் மீண்டும் கைது - முழுப் பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details