மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த மூன்று மாணவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்களது கையில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பேரையூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான கீர்த்திகான், ஈஸ்வரன், மணிகண்டன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மதுரையைச் சேர்ந்த தமிழ்வாணனை காவல் துறையினர் கைது செய்தனர்.