மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் சங்கரலிங்கம். இவர், ஆலாத்தூர் கிராமத்தில் தனக்கு செந்தமான 1040 சதுர அடி காலி இடத்தில் வீடு கட்ட வரைபட அனுமதி கேட்டு ஊராட்சி செயலர் சுந்தரபாண்டியிடம் சென்றுள்ளார். அதற்கு சுந்தரபாண்டி, 12000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
தலைமைக் காவலரிடமே லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளர்; சிக்கியது எப்படி? - Bribery
மதுரை: வீடு கட்ட அனுமதி வழங்க 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் சுந்தரபாண்டியை லஞ்சஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.
லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது
இதுதொடர்பாக தலைமை காவலர் சங்கரலிங்கம் லஞ்சஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர், ஊராட்சி செயலர் சுந்தரபாண்டியை கைது செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.