தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பு விமானம் மூலம் தங்கக்கடத்தலில் ஈடுபட்டவர் கைது! - சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு சிறப்பு விமானம் மூலம் வந்த பயணி ஒருவர், தன்னுடைய உள்ளாடையில் மறைத்து கொண்டுவந்த 224 கிராம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Arrest of person involved in gold smuggling by special plane; 7 lakh worth of gold confiscated!
Arrest of person involved in gold smuggling by special plane; 7 lakh worth of gold confiscated!

By

Published : Jul 24, 2020, 9:45 PM IST

மதுரை விமான நிலையத்தில் சிறப்பு விமானம் மூலம் வரும் பயணி கடத்தலில் ஈடுப்பட்டுள்ளதாக மத்திய இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மதுரை விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஐக்கிய அரசு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு விமானம் மூலம் ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் மதுரைக்கு வந்துள்ளனர்.

அதில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்ட போது, நாகப்பட்டினத்தை சேர்ந்த சலே மரைக்காயர் என்பவர் உள்ளாடையில் மறைத்து 224 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிந்தது.

இதன் மதிப்பு ரூ. 7,98,280 என்று சுங்கத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். பின் தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details