மதுரை:மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இவர், தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார். மதுபோதையில் நவநீதகிருஷ்ணன் பக்கத்துவீட்டுக்காரரிடம் கோழியை காணவில்லை என்று நேற்று சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து வாடிப்பட்டி காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு சென்றபோது ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணன் காவலர்களிடத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வெறியான நவநீதிகிருஷ்ணன், மணிமாறன் என்ற காவலரின் மூக்கை கடித்து துப்பியுள்ளார்.